நேரசை ஓரலகு; நிரையசை ஈரலகு; நேர்பு அசை மூவலகு; நிரைபு அசை நான்குஅலகு என்பர் அவிநயனார். அஃதாவது நேரசை முதலாவது அலகு, நிரையசைஇரண்டாவது அலகு, நேர்புஅசை, மூன்றாவது அலகு, நிரைபுஅசை நான்காவது அலகுஎன அலகுகள் நான்கு வகையாம். (யா. க. 5. உரை)முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவதுஎன்பனவற்றை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என வழங்குவதுஉண்டு.‘ஒன்றென மொழிப’ (தொ. பொ. 261)‘இரண்டென மொழிப’ (தொ. பொ. 262)‘மூன்றென மொழிப’ (தொ. பொ. 263)‘நான்கென மொழிப’ (தொ. பொ. 264‘ஐந்தென மொழிப’ (தொ. பொ. 265)‘ஆறென மொழிப’ (தொ. பொ. 266)என்ற தொல்காப்பிய நூற்பாக்களும்,‘இரண்டென மூன்றென, நான்கென ஐந்தென- ஆறென ஏழென எட்டென தொண்டென’(பரி. 3 : 78,79)“இரண்டு முதலாகிய எண்கள் நான்கும் ஈண்டுப் பூரணப் பொருள“, “ஈண்டும்ஏழு முதலாகிய எண்கள் பூரணப் பொருள”(பரிமேலழகர் உரை) என்ற செய்தியும்இங்ஙனம் பொருள் செய்வதற்கு எடுத்துக்காட்டான சான்றுகளாம்.