அசைகளுக்குப் புறனடை

ஐகாரக்குறுக்கம் பிறிதொன்றனோடு இயைந்தும், ஐகாரத்தி னோடு இயைந்தும்நிரையசையாம்.‘கெண் டையை வென்ற’ (யா.கா. 38 மேற்.) என்புழி, கெண்டையை எனச் சீர்க்கடைக்கண் ஐகாரம் இரண்டு இணைந்துநிரை யசையாயிற்று.‘அன் னையை யான் நோவ தவமால்’ (யா. கா. 38 மேற்.) என்புழி ‘அன்னையை’ எனச் சீர்நடு ஐகாரம் இரண்டிணைந்து நிரையசை ஆயிற்று.‘படுமழைத் தண் மலை வெற்பன்’ (யா. வி. பக். 55) என்புழி, ‘படு மழை ’ ‘தண் மலை ’ என்பவற்றில் சீர்க்கடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இயைந்துநிரையசையாயிற்று.‘தன்னையரும் காணத் தளர்ந்து’ (யா. வி. பக். 55) என்புழி, ‘தன் னையரு ம் ’ எனச் சீர்நடு ஐகாரம் குற்றெழுத்துடன் கூடிநிரையசையாயிற்று.‘பையுள் மாலைப் பழுமரம்படரிய’ (தொ. கள. 23 மேற். நச்.) என்புழி, ‘ பையுள் ’ எனச்சீர் முதற்கண் நின்ற ஐகாரம், குறிலுடன் நிரையசையாகாது,தானே தனித்து நேரசை யாயிற்று. (யா. வி. பக். 55)‘அடைப்பை யாய் கோல்தாஎனலும்’ (யா. கா. 38 மேற்.) என்புழி ‘அடைப் பையாய் ’ எனச்சீர்நடு ஐகாரம் நெடிலோடு இயைந்து நிரையசை யாயிற்று. (யா.க. 9 உரை)