அசேதனம் செய்வினை

வினைவகைகளாக இலக்கணக்கொத்துக் கூறுவன பலவற் றுள் இஃது ஒன்று;அறிவற்ற பொருள்கள் செய்யும் வினை.எ-டு : விளக்குக் காட்டிற்று, விடம் கொன்றது,காற்று அலைத்தது, இருள் மறைத்தது – என வருமாறு காண்க. (இ. கொ. 81)