அகம் என்ற நிலைமொழியின் முன் வருமொழியாகக் கை என்ற பெயர் வரின்,
அகரம் நீங்கலான ஏனையெழுத்துக்கள் நிலைமொழியில் கெட, எஞ்சிநின்ற
அகரத்தொடு கை என்பது இணையும்போது, இடையே ககரத்தின் இனமெல்லெழுத் தாகிய
ஙகர ஒற்றுவர, அகம் + கை
> அ + கை
> அங் + கை = அங்கை என
முடிவுபெறும். (தொ. எ. 315 நச்.)
பிற்காலத்தில், அகம் + செவி = அஞ்செவியாயிற்று. ‘அஞ்செவி நிறைய
ஆலின’ (முல்லைப். 89)