அங்கநாடு

விசயவரன்‌ என்னும்‌ அரசனுடைய நாடு அங்க நாடு. சண்பை என்னும்‌
வளமுள்ள நகரைத்‌ தலைநகராகக்‌ கொண்டது, கங்கை நதியால்‌ வளம்‌ பெறும்‌ நாடு,
மணிமேகலையின்‌ முற்பிறவியில்‌ தவ்வையராகய தாரை, வீரை என்பவர்களை, அங்க நாட்டின்‌
கச்சயத்தை ஆண்ட துச்சயன்‌ என்பவன்‌ மணந்தான்‌ என்பது மணிமேகலைச்‌ செய்தி.
“இன்னும்‌ கேளாய்‌ இலக்குமி! நீ; நின்‌
தவ்வையர்‌ ஆவோர்‌, தாரையும்‌ வீரையும்‌
ஆங்கு அவர்தம்மை அங்கநாட்டு அகவயின்‌
கச்சயம்‌ ஆளும்‌, கழல்கால்‌ வேந்தன்‌,
துச்சயன்‌ என்போன்‌ ஒருவன்‌ கொண்டனன்‌” (மணிமே, 10; 50 54)
“உருமண்‌ ஹுவாவின்‌ பெருமுது குரவன்‌
அவிமில்‌ சூழ்ச்சித்‌ தவறில்‌ தோழன்‌
பெரும்புனற்‌ கங்கை பெருவளங்‌ கொடுக்கும்‌
அங்கரன்னாட்டு அணிபெற விருந்தது
எங்குநிகரில்ல தெழிற்கிடங்கணிந்தது
பொங்குமலர்‌ நறுந்தார்‌ புனைமுடிப்‌ பொங்கழல்‌
விச்சாதரருங்‌ தேவகுமரரும்‌
அச்சங்‌ கொள்ள வாடுகொடி. நுடங்கிச்‌
சக்திக்‌ குடத்தொடு தத்துற லோம்பி
விளங்குபு துளங்கும்‌ வென்றித்தாகி
அளந்து வரம்பறியா வரும்படை யடங்கும்‌
வாயிலும்‌ வனப்பும்‌ மேவி வீற்றிருந்து
மதிலணி தெருவிற்றாக மற்றோர்க்‌
கெதிரில்‌ போக மியல்பமை மரபொடு
குதிரையுங்‌ களிறும்‌ கொடுஞ்சித்‌ தேரும்‌
அடுதிறன்‌ மன்னரும்‌ வடுவின்று காப்ப
நெடுமுடி மன்னருண்‌ மன்ன னேரார்‌
கடுமுரண ழித்த காய்சின நெடுவேற்‌
படுமணி யானைப்‌ பைந்தார்‌ வெண்குடை
உக்கிர குலத்துளரசருளரசன்‌
விற்றிறற்றானை விசயவர னென்னும்‌
நற்‌றிறன்‌ மன்னனாளுங்‌ காக்கும்‌
சண்பை பெருநகர்ச்‌ சால்பொடும்‌ விளங்கிய” (பெருங்‌,2;20; 103 125)