அங்கதத்தின் இருவகை

அங்கதம் எனப்படும் செய்யுள் செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம்என இருவகைப்படும். அவை வசை போன்று புகழாதலும், புகழ் போன்றுவசையாதலும் உரிய.எ-டு : ‘……. பேகன்கொடைமடம் படுதல் அல்லதுபடைமடம் படான்பிறர் படைமயக் குறினே.’ (புறநா. 142)எனக் கொடையிடத்து அறியாமை தோன்றப் பேகன் செயற் பட்டான் எனக்கூறுதல், வசைபோன்று புகழாய்ச் செம் பொருளின் பாற்படும்.‘நூற்றுவர் தலைவனைக், குறங்கறுத் திடுவான்போல்’(கலி.52) என வீமன் கண்ணன் செய்த குறிப்பினை உட் கொண்டுதுரியோதனனைத் தண்டினால் தொடையிலடித்து உயிர் போக்கியமை, புகழ்போன்றுவசையாக் கரந்த அங்கதத்தின் பாற்படும். (என்னை? இடைக்குக்கீழ்ப்பகுதியில் தாக்கிச் செகுத்தல் மேம்பட்ட மறத்திற்கு இழுக்குஆதலின்.)(தொ. செய். 124. நச்.)