அங்கதச்செய்யுள், அகத்திணைபுறத்திணையுள் நிகழுமாறு

அங்கதச் செய்யுள், அகத்திணையுள் கைக்கிளை பெருந் திணைபற்றியும், பிரிவுக்காலத்தில் தோழி இயற்பழித்தலும் பரத்தையர் கூற்றும்ஆகியவை பற்றியும் வரும்; புறத்திணை யுள் காஞ்சித்திணைப்பொருள்பற்றியும், ‘கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்’, ‘வஞ்சினம்கூறல்’ முதலியவை பற்றியும் வரும். (தொ. செய். 129. ச. பால.)