எவ்வகைப்பட்ட பெயர்ச்சொல் முன்னரும் வல்லெழுத்து வருமொழி
முதற்கண்வரின், இடையில் வரும் அக்குச் சாரியை, அகரம் நீங்கிய ஏனைய
எழுத்துக்களெல்லாம் கெடப் புணரும். இது வருமொழி இயல்புகணம் வரினும்
ஒக்கும்.
எ-டு : குன்று + அக்கு + கூகை = குன்றக்கூகை
மன்று + அக்கு + பெண்ணை = மன்றப்பெண்ணை
தமிழ் + அக்கு + நூல் = தமிழநூல் – மென்கணம்
தமிழ் + அக்கு + யாழ் = தமிழயாழ் – இடைக்கணம்
தமிழ் + அக்கு + அரையர் = தமிழவரையர் – உயிர்க் கணம் (தொ. எ.
128 நச்.)