அக்கர வருத்தனை

அக்கரம் – எழுத்து; வருத்தனை – கூட்டுதல் (-பெருக்கல்).மிறைக்கவியெனும் சித்திரகவியுள் ஒன்று. ‘எழுத்து வருத்தனம்’ என இதனைத்தண்டியலங்காரம் சுட்டும். ஒரு சொல், முதலெழுத்துஓரெழுத்தொருமொழியாய்ப் பொருள் தந்து, பின்னர், முறையே ஒவ்வோர்எழுத்தாய் அதனுடன் கூட்டுந் தோறும் வேறுவேறு பொருள் தருமாறுஅமைவது.எ-டு : ‘ஏந்திய வெண்படையும் (1), முன்னாள் எடுத்ததுவும் (2),பூந்துகிலும்(3), மால் உந்திப் பூத்ததுவும் (4), – வாய்ந்தஉலைவில் எழுத்தடைவே ஓரொன்றாச் சேர்க்கத்தலைமலைபொன் தாமரைஎன் றாம்.’முழுச்சொல்லும் சேர்ந்து ‘கோகநகம்’ என்றாகித் தாமரை எனப்பொருள்படும்.1. திருமால் கையில் ஏந்தும் வெண்படை, கம் (-சங்கு)2. அவன் முன்பு கண்ணனாய்த் தூக்கியது, நகம் (-கோவர்த் தனமலை)3. திருமால் உடுத்த ஆடை, கநகம் (-பீதாம்பரம்)4. அவன் உந்தியில் மலர்ந்தது, கோகநகம் (-தாமரை)சங்கினைக் குறிக்கும் ‘கம்பு’ எனும் சொல் கடைக்குறையாய் நின்றது;மெய்யெழுத்துக் கணக்குப் பெறாத நிலையில் ஓரெழுத் தொருமொழியாயிற்று எனஅமைவு கொள்க. (தண்டி. 98 உரை)