நவதாரணையுள் ஒன்று. அவ்வொன்பதாவன : நாமம், அக்கரம், செய்யுள்,சதுரங்கம், சித்திரம், வயிரம், வாயு, நிறைவு குறைவாகிய ஒண்பொருள்,வத்து என்னும் தாரணைகள்.இதனை உரு அக்கர சங்கேதங்களால் இடம்பட அறிந்து தரித்து,அனுலோமமாகவும், பிரதிலோமமாகவும் பிறவாறாக வும் சொல்லும் திறம் தாரணைநூலுள் கூறப்பட்டது. அந்நூல் இக்காலத்து வழக்கு ஒழிந்தது. (யா. வி.96. பக். 555)