ஒரு பாடலில் ஓர் இன்றியமையாத சொல்லை முதலெழுத்து நீக்கியசொல்லாகவும், மற்றொரு சொல்லை இடை யெழுத்து நீக்கிய சொல்லாகவும் கொண்டுகூறக் கருதிய பொருளை விளக்குவது.எ-டு : ‘எந்தை இராமற்(கு) இமையோர் சரண்புகுதமுந்த நகரி முதலெழுத்தில் லாநகரி;உந்துதிரட் கிள்ளைஇடை ஒற்றில்லாக் கிள்ளைகள்தேர்சிந்த முழுதும் இழந்தான் தெசமுகனே.’இராமனுடைய திருவடிகளில் தம்மைக் காக்குமாறு தேவர்கள் சரண்புக்காராக, இராவணனுடைய இலங்கை மாநகரம், நகரி என்ற சொல்லில்முதலெழுத்து நீங்கியதா யிற்று. (கரியாயிற்று; அநுமன் வாலில் வைத்த தீநகரைக் கரியாக்கிவிட்டது). கிள்ளை என்பதன்கண் இடையொற்றில் லாதவற்றைத்தன் குதிரை தேர்ப்படையோடு இராவணன் முற்றும் இழந்தான். (கிள்ளை,இடையொற்று நீங்கின் கிளை; அஃதாவது உறவினர்.) இராவணன் தன் உறவினர்எல்லோ ரையும் இழந்துவிட்டான் என்ற கருத்திற்று.இவ்வாறு அமைக்கும் அக்கரச்சுதகமும் உண்டு என்பது. அக்கரச்சுதகம் -எழுத்துச் சுருக்கம். (மா. அ. பா. 809)