அகைப்பு வண்ணம்

அறுத்தறுத்துப் பயில்வது அகைப்பு வண்ணமாம். விட்டு விட்டுச்செல்லுதலின் இப்பெயர்த்தாயிற்று.எ-டு : ‘வாரா ராயினும் வரினு மவர்நமக்(கு)’யாரா கியரோ தோழி நீர (குறுந். 110)இவ்வடிகளில் ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும்அறுத்தறுத்து வண்ணம் ஒழுகியவாறு காண்க. (தொ. செய். 229. பேரா.)