அகைத்தல் – அறுத்தல். இங்ஙனம் அறுத்தறுத்து அஃதாவது விட்டுவிட்டுச்சேறல், ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் செய்யுளடிவருவழி நிகழும் ஓசை வேறு பாடாம்.எ-டு : ‘வாரார் ஆயினும் வரினு மவர்நமக்கு’ (குறுந். 110)இவ்வடியில் முதல் இருசீர் நெடில் பயின்றும் அடுத்த இருசீர் குறில்பயின்றும் விட்டுவிட்டு ஒலித்தல் அகைத்தலாம். (தொ. செய். 229பேரா.)