அகவல்வெண்பாஆவது இன்னிசை வெண்பா ஆகும் என்பர் ஒருசாரார்.எ-டு : ‘வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்வைகலும் வைகற்றம் வாணாள்மேல் வைகுதல்வைகலை வைத்துணரா தார்!’ (நாலடி. 39)இஃது அகவல்வெண்பா என்று அணியியல் உடையார் காட்டின பாட்டு.மனைக்குப்பாழ் வாணுதல் இன்மை; தான்செல்லும்திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை; இருந்தஅவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப்பாழ்கற்றறி வில்லா உடம்பு. (நான்மணி. 20)இஃது அகவல் வெண்பா என்று செய்யுளியல் உடையார் காட்டின பாட்டு. (யா.க. 57.உரை)