கழிநெடிலடி நான்கு சமமாய் அமைவது. அறுசீர் விருத்தம்பெரும்பான்மைத்து. எழுசீர் எண்சீரான் வருவனவும் சிறப்புடைவிருத்தங்களே. எண்சீரின் மிக்கு வருவன சிறப்பில. அடிமறியாய் வருவனஆசிரிய மண்டில விருத்தம் எனவும், அடிமறி ஆகாது நிற்பன ஆசிரிய நிலைவிருத்தம் எனவும் வழங்கப்பெறும். (யா. க. 77 உரை)