அகவல் முதலிய ஓசையை ஒன்றுமும்மூன்று ஆக்குதல்

அகவலோசையை ஏந்திசை, தூங்கிசை, மயங்கிசை என மூன்றாகப் பகுப்பர்.செப்பல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசைகளையும் மும்மூன்றாகப்பகுப்பர். இயலசை மயங்கிய உரிச்சீரும், உரியசை மயங்கிய இயற்சீரும்வெண்சீரும் பற்றி ஓசை வேறுபடத் தோன்றலின், நான்கு ஓசைகளையும்மும்மூன்று என்று பகுதிப்படுத்திப் பன்னிரண்டு என்று கூறும்வரையறையுள் அவை அடங்கா ஆதலின், அகவல் முதலிய ஓசையை மும்மூன்றாகப்பகுத்தல் தொல்காப்பியனார் கருத்தன்று. (தொ. செய். 11 நச்.)