நேரிசை, நிலைமண்டிலம், இணைக்குறள், அடிமறிமண்டிலம் எனப்பெரும்பான்மையும் கூறப்படும் அகவற்பாவின் வகைகள் நான்கனுடன், மருட்பா,நூற்பா என இரண்டையும் கூட்டி ஆறு எனக் கூறும் சாமிநாதம் (158)1. அகப்பா அகவல், 2. புறப்பா அகவல், 3. நூற்பா அகவல், 4. சித்திரஅகவல், 5. உறுப்பினகவல், 6. ஏந்திசை அகவல் என அகவல் ஓசையின் ஆறுவகைகளைஒருசார் ஆசிரியர் குறிப்பதாகக் கூறும் யாப்பருங்கல விருத்தியுரை.‘அகவல் ஓசை விகற்பம்’ காண்க. (யா. வி. பக். 284. 285)