ஒன்றாத வஞ்சித்தளையான் வரும் ஓசை இது.எ-டு : ‘வானோர்தொழ வண்டாமரைதேனார்மலர் மேல்வந்தருள்ஆனாவருள் கூரறிவனை’இவ்வஞ்சியடிகளுள் கனி முன் நேர் வருதலின் ஒன்றாத வஞ்சித்தளை வந்து,அகவல்தூங்கல் ஓசை நிகழுமாறு காண்க. (யா. கா. 22 உரை)