அகவல்ஓசை விகற்பம்

அகப்பா அகவல், புறப்பா அகவல், நூற்பா அகவல், சித்திர அகவல்,உறுப்பின் அகவல், ஏந்திசை அகவல் என்பன. இவற்றுள் அகப்பா அகவல்,அகப்பொருளைத் தழுவிப் பத்து உறுப்பிற்றாய் (‘அகப்பாட்டுறுப்புக்கள்’காண்க), வஞ்சி விரவாது வந்து முடியும் ஆசிரியப்பா. புறப்பா அகவல்,பாடாண்துறைமேல் பாடப்படும் ஆசிரியப்பா. நூற்பா அகவல், விழுமியபொருளைத் தழுவிவரும் சூத்திரயாப் பாயிற்று. சித்திர அகவல், சீர்தோறும்அகவி வருவது. உறுப்பின் அகவல், ஒருபொருள்மேல் பரந்து இசைப்பது.ஏந்திசை அகவல் எழுத்து இறந்து இசைப்பது.(யா.க. 77. உரை)