அகவல்ஒசையின் கூறுகள்

ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை என்பன. இவை முறையே நேரொன்றாசிரியத்தளையான் வருவனவும், நிரையொன் றாசிரியத் தளையான் வருவனவும்,இவ்விருதளையும் தம்முள் ஒத்து இயலுதலால் வருவனவும் ஆகும். அவற்றைஅவ்வத் தலைப்புள் காண்க. (யா. கா. 69. உரை)