ஒண்மையான் புலவன் உரைத்த அகலக்கவியைக் கொடை முதலிய வரிசைசெய்துபுனைந்து கொள்பவர் “பெரிய புகழாலும் உருவத்தாலும் முறையே நிறைமதியும்இளஞாயி றும் இவராவார்!”எனச் சிறப்புற்று, இவ்வுலகில் புகழுடம் பான்நிலைபெற்றுத் தலைமை எய்தி நிலவுவர்.‘உருவும் புகழும் ஆகுவிர் நீர்’ (புறநா. 6) என்றார் பிறரும்.‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி, எய்துபஎன்பதம் செய்வினை முடித்தே’ (புறநா. 27) என மறுமைப்பயன் மிகுதிகூறப்பட்டவாறு காண்க. (இ. வி. பாட். 180)