அகர எழுத்துப்பேறளபெடை வருமிடங்கள்

ஆகார ஈற்று அல்வழிக்கண் உம்மைத்தொகை எழுத்துப் பேறளபெடையாக அகரம்
பெற்று வரும்.
எ-டு : உவாஅப்பதினான்கு, இராஅப்பகல் (தொ. எ. 223 நச்.)
பண்புத்தொகைக்கண் அராஅப்பாம்பு எனவும், எழுவாய்த் தொடர்க்கண்
இராஅக் கொடிது எனவும், பெயரெச்சமறைத் தொடர்க்கண் இராஅக் காக்கை
எனவும், அகரம் எழுத்துப் பேறளபெடையாக வரும்.
இயல்புகணத்துப் புணர்ச்சிக்கண்ணும் இறாஅவழுதுணங் காய் – என
அகரப்பேறு நிகழும். (தொ.எ. நச். உரை)
ஆகாரஈற்று வேற்றுமைக்கண், குற்றெழுத்தை அடுத்துவரும்
ஆகாரஈற்றுப்பெயர், ஓரெழுத்தொரு மொழியாகிய ஆகார ஈற்றுப் பெயர் – இவை
வருமொழியொடு கூடும் பொருட் புணர்ச்சிக்கண் அகரம் எழுத்துப்பேறளபெடையாக
வரும்.
எ-டு : பலா
அக் கோடு, கா
அக் குறை; பலா
அ இலை, பலா
அ நார் – என இயல்புகணத்தும்
அகரம் வரும்.
இரா என்ற சொல் பெயராய் இராக்காலத்தை உணர்த்துவ தாயின், அஃது
எழுவாய்த் தொடர்க்கண் அகரம் பெறுமே யன்றி, வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
அகரமாகிய எழுத்துப் பேறளபெடை பெறாது, இராக்கொண்டான் – இராக்கூத்து –
என்றாற் போல முடியும். (தொ. எ. 226, 227)