அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் பொதுவாக இன்சாரியை பெற்று உருபுகளொடு
புணரும் (தொ. எ. 173 நச்.); ஆயின், ஏழனுருபொடு புணருமிடத்து
இன்சாரியையாவது அத்துச் சாரியையாவது பெற்று முடியும்.
எ-டு : விளவினை – விளவிற்கு. . . . . . விளவின்கண், விளவத்
துக்கண்; பலாவினை – பலாவிற்கு. . . . . . பலாவின்கண், பலாவத்துக்கண்.
(தொ. எ. 181 நச்.)