அகரஈற்றுச் சொல்லின் முன் – என்னும் பொருளது இத் தொடர். முன், முனை, முன்னர் என்பன ஒரு பொருளன. (தொ. எ. 125 நச். உரை) முன்னோனை ‘முனைவன்’ என்பது ஒரு சொல் விழுக் காடாம், முன் என்பதனை முனை என்ப ஆதலின். (தொ. பொ. 649 பேரா.)