அகரம் ஓகாரமாகத் திரியும் பெயர்கள்

‘ஆ ஓ ஆகும் பெயருமா ருளவே’ என்ற எச்சவும்மையான், ஈற்றயல்ஆகாரம் ஓகாரமாக வரும் பெயர்களன்றி,ஈற்றயல் அகரம் ஓகாரமாகத் திரியும் பெயர்களும் உள என்பது பெற்றாம்.எ-டு : கிழவன் – கிழவோன் (‘நாடுகிழ வோனே’ பொருந. 248)கிழவள் – கிழவோள் (‘கிழவோள் தேஎத்து’ இறை. அ. 8) (தொ. சொ. 189தெய். உரை)