அகரம் தானே நடந்தும் நடந்து உடம்பை நண்ணியும்
நடத்தலானும்,
அரன் –
அரி –
அயன் –
அருகன் என்னும் பரமர்
திருநாமத்திற்கு ஒருமுதலாயும் அறம்பொருளின்பம் என்னும் முப்பொருளின்
முதற்பொருட்கும்
அருள் –
அன்பு –
அணி –
அழகு – முதலாயின நற்பொருட்கும்
முதலாயும் வருதலானும், முன்வைக்கப்பட்டது. (நன். 72
மயிலை.)
அகரமானது சைதந்நிய மாத்திரமாய்த் தனித்தும், எல்லா வுயிர் கட்கும்
காரணனாகி அவற்றொடு கலந்தும் அவற்றின் முன் நிற்கும் ஆதிபகவனே போல,
நாதமாத்திரையாய்த் தனித்தும், எல்லா எழுத்திற்கும் காரணமாய் அவற்றொடு
கலந்தும் அவற்றின் முன் நிற்றலால் ‘அம் முதல்’ என்றார். (நன். 73
இராமா.)