அகரம் உகரம் ஒகரம் ஆதல்

ஒகரம் உகரம் பிறக்கும் இடத்தே பிறப்பது. உய் – ஒய், துளை -தொளை,
துடை – தொடை, துகை – தொகை எனச் செய்யுளி லும் வழக்கிலும் உகரஒகரங்கள்
விரவி வருகின்றன.
உய் – ஒய் எனவும் சுரிவ – சொரிவ எனவும் கன்னடத்திலும், புகழ்தல் –
பொகட்த எனவும் முகைகள் – மொக்குலு எனவும் தெலுங்கிலும் உகர ஒகரங்கள்
விரவிவருதல் அறியப்படும்.
வடமொழியில் அகரஉகரங்களின் சந்தியக்கரம் ஓ என்று
குறிக்கப்படுகிறது. கங்
கா +
உதகம் = கங்
கோதகம் (சந்திர + உதயம் =
சந்திரோதயம்) எனச் சந்தியில் அகர உகரங்கள் ஓகாரமாகும் புணர்ச்சி
வடமொழியில் தெளிவாதல் போலத் தமிழில் தெளிவாக இல்லை. ஆதலின்
அகரஉகரங்கள் ஒகர மாதல் தமிழிற்குப் பொருத்தமின்று. (எ. ஆ. பக். 7,
8)