அகரமோடு உயிர்த்தல்

அகரத்தொடு தோன்றுதல்; மெய்கள் அகரத்தொடு புணரும் வழி, தம்
வடிவிலுள்ள புள்ளியை நீக்கி அப்புள்ளி நீங்கிய வடிவமே தம் வடிவமாக
வரிவடிவில் தோன்றுதல். க் + அ = க.
ககரமெய்யின் புள்ளி நீங்கிய வடிவமே அஃது அகரத்தோடு இணைந்து
உயிர்மெய்யாங்கால் உரிய வடிவமாம் என்று குறிப்பிடும் இப்பகுதியில்,
உயிர்த்தல் என்பதற்குத் தோன்று தல் என்ற பொருளே தக்கது; ஒலித்தல்
என்பது தக்கதன்று. இத்தொடர் வரிவடிவம் பற்றிய இடத்தது. (தொ. எ.
17)
உயிர்த்தல் என்பதற்கு ஒலித்தல் என்பது பொருளன்று; உரு உருவாகி
உயிர்த்தலும், உருவுதிரிந்து உயிர்த்தலும், புள்ளி யுண்டாதலும்,
இலவாதலும் வரிவடிவிற்கேயன்றி ஒலிவடி விற்கு இன்மையின், தோன்றுதல்
என்பதே பொருளாம். (சூ.வி.பக். 43)