அகரமாகிய முதலையுடையனவும், னகரமாகிய இறுவாயினை யுடையனவும். (தொ. எ.
இள. உரை)
அகரம் முதல் னகரம் ஈறாகக் கிடந்த (தொ. எ. 1 நச். உரை)
‘அகரம் முதல் னகர இறுவாய்’ என்பன அகரத்தை முதலாவ தாகவும் னகரத்தை
ஈறானதாகவும் கொண்டு முடியும் முப்பது எழுத்துக்கள்.
(‘அகரம் முதல் னகர இறுவாய்’ என்புழி, அகரம் னகரம் என்பன பண்பல்ல
ஆயினும், பண்புதொக்க தொகைபோல விசேடிப்பதும் விசேடிக்கப்படுவதுமாகிய
இயைபுபற்றிப் பண்புத்தொகை எனப்பட,) ‘அகரமுதல் னகர இறுவாய்’ என்பன
பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகையாம். இம்முப்பது
எழுத்துக்களும் அகரமும் னகரமும் சேர்ந்தனவே ஆதலின், இது விடாத
அன்மொழித் தொகை யாம்.
அகர ஈறு – அகரமாகிய ஈற்றையுடைய சொல்.
புள்ளி ஈறு – மெய்யெழுத்தாகிய ஈற்றையுடைய சொல்
என்பனவும் விடாத அன்மொழித் தொகையாம். இதனை வடநூல் தற்குண
சம்விஞ்ஞான வெகுவிரீகி என்னும். (எ. கு. பக். 3)
‘அகரமுதல் னகரஇறுவாய்’ என்பன இளம்பூரணருக்கு அன்மொழித்தொகை;
நச்சினார்க்கினியர்க்கு எழுவாய்த் தொடர்கள்.
(அகரத்தை முதலாகவும் னகரத்தை இறுதியாவும் உடைய என்று பொருள்
செய்யின், அகரமுதல் – னகரஇறுவாய் – என்பன இரண் டாம்
வேற்றுமைத்தொகை).