அகரம் எனத் தொகையான் ஒன்றும், உயிர் அகரமும் உயிர் மெய் அகரமும் என வகையான் இரண்டும், உயிர் அகரம் ஒன்றும் உயிர்மெய் அகரம் பதினெட்டும் என விரியான் பத்தொன்பதும் ஆம். உயிர்மெய் அகரம் க ங ச ஞ ….. ற ன எனக் காண்க. (நன். 60 மயிலை.)