அகரஈற்று வியங்கோள் வினைமுற்று நாற்கணம் வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : (அவன்)
செல்க காட்டின்கண், நாட்டின்கண்,
வீட்டின்கண், அரணின்கண்.
அவற்றுள்,
வாழிய என்னும் முற்று
ஈற்றுயிர்மெய் கெட்டு வாழி என நின்று இயல்பாக முடிதலுமுண்டு. (211)
(தொ. எ. 210. நச்.)