அகரஈற்று வினையெச்சப் புணர்ச்சி

அகரஈற்று வினையெச்சம் பொதுவாக வன்கணம் வரின் மிக்கும், ஏனைக்கணம்
வரின் இயல்பாகவும் புணரும்.
எ-டு : உணக் கொண்டான்; உண நின்றான் (தொ. எ. 204 நச்.)
அவற்றுள்,
சாவ என்னும் வினையெச்சம்
ஈற்றுயிர்மெய் கெட்டுப் புணர்தலு முண்டு.
வருமாறு : சாவக் குத்தினான்; சாக்குத்தினான்
சாவ ஞான்றான்; சாஞான்றான் (தொ.எ. 209 நச்.)
இங்ஙனமே, அறிய என்னும் வினையெச்சம் ஈற்றுயிர் மெய் கெட்டுப்
புணர்தலுமுண்டு.
வருமாறு : ‘பால்அறி வந்த உயர்திணைப் பெயரே’ (தொ. சொ. 162
சேனா.)
செய்யிய என்னும் வினையெச்சம் பொதுவாக நாற்கணம் வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : உண்ணிய சென்றான், நடந்தான், வந்தான், அடைந் தான்.
(உயிர்க்கணம் வருமிடத்து வகர உடம்படு மெய் பெறுதல் இயல்பு
புணர்ச்சியே). (தொ.எ. 210 நச்.)