அகரஈற்று வினைமுற்றுப் புணர்ச்சி

அகரஈற்றுத் தெரிநிலைவினைமுற்றும் குறிப்புவினைமுற்றும் நாற்கணங்கள்
வந்துழியும் இயல்பாகப் புணரும்.
எ-டு :
உண்டன குதிரை, செந்நாய், தகர்,
பன்றி;
உண்டன நாய், யானை,
அரிமா
‘கரியன’ என்ற
குறிப்புவினைமுற்றையும் நிறுத்தி, இவ்வாறே வன்கணமும் இயல்புகணமும்
கூட்டி முடிக்க. (தொ. எ. 210 நச்).
அவற்றுள்
வாழிய என்னும் வியங்கோள்
வினைமுற்று ஈற்றுயிர்மெய் கெட்டும் கெடாதும் நாற்கணத்தொடும்
புணரும்.
வருமாறு :
வாழிய கொற்றா, வாழி கொற்றா;
வாழிய நாகா, வளவா, அரசா; வாழிநாகா, வளவா, அரசா (தொ. எ. நச்.
211).
அகரஈற்றுச் செய்ம்மன என்னும் முற்றும் நாற்கணம் வரினும் இயல்பாகப்
புணரும். (210)