அகரஈற்று எழுவாய்த்தொடர்ப் புணர்ச்சி

அகரஈற்றுப் பெயர் அல்வழிக்கண் வருமொழி வன்கணம் வரின், வந்த
வல்லெழுத்து மிக்கும், ஏனைக்கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.
எ-டு : விளக்குறிது, விளச்சிறிது, விளத்தீது,
விளப்பெரிது;
விளஞான்றது; விளவலிது; விள (வ்) அரிது எனவரும்.
(தொ. எ. 203 நச்.)