அகரஈற்று உரிச்சொல் வன்கணம் வந்துழி வல்லெழுத்து மிக்கும் இனமான
மெல்லெழுத்து மிக்கும் புணரும்; ஏனைய கணங்கள் வரின் இயல்பாகப்
புணரும்.
எ-டு : தட + கை = தட
க்கை; தவ + கொண்டான் = தவ
க் கொண்டான்; குழ + கன்று =
குழ
க் கன்று – இவை வல்லெழுத்து
மிக்கன.
தட + செவி = தட
ஞ்செவி; கம + சூல் = கம
ஞ்சூல் – இவை மெல்லெழுத்து
மிக்கன.
தவ + நெடிய = தவநெடிய
தவ + வலிய = தவவலிய
தவ + அரிய = தவ (வ்) அரிய – என மென்கணம், இடைக்கணம்,
உயிர்க்கணம் வந்துழி, இயல்பு ஆகியவாறு. (உடம்படுமெய் பெறுதலும் இயல்பு
புணர்ச்சியாம்.) (தொ. எ. 203 நச்.)