அகரஈற்று மான – விறப்ப – என்ன – உறழ – தகைய – நோக்க – எள்ள – விழைய
– புல்ல – பொருவ – கள்ள – மதிப்ப – வெல்ல – வீழ – கடுப்ப – ஏய்ப்ப –
மருள – புரைய – ஒட்ட – ஒடுங்க – ஓட – நிகர்ப்ப – போல – மறுப்ப – ஒப்ப
– காய்ப்ப – நேர – வியப்ப – நளிய – நந்த – ஆர – அமர – ஏர – ஏர்ப்ப –
கெழுவ – கொண்ட முதலிய உவமச் சொற்களும், என என்னும் எச்சமும்,
சுட்டும், ஆங்க என்னும் உரையசைக்கிளவியும் வருமொழி வன்கணம் வரின் வந்த
வல்லெழுத்து மிகும்.
வருமாறு : புலிபோலப் பாய்ந்தான் – உவமக்கிளவி; கொள் ளெனக்
கொண்டான் – எனவென் எச்சம்; அக் கொற்றன் – சுட்டிடைச் சொல்; ‘ஆங்கக்
குயிலு மயிலும் காட்டி’- ஆங்க என்னும் உரையசைக் கிளவி.
வருமொழியில் ஞநம – யவ – என்ற மென்கணமும் இடைக்கண மும் வரின்,
சுட்டு நீங்கலான ஏனைய இடைச்சொற்கள் இயல்பாகப் புணரும்; உயிர்க்கணம்
வரின் உடம்படுமெய் பெறும்.
வருமாறு : புலிபோல ஞான்றான் ….. புலிபோல வடைந்தான்;
(வ் : உடம்படுமெய்), கொள்ளென நினைந்தான் ….. வாவென வடைந்தான்;
(வ் : உடம்படுமெய்) ஆங்க மருண்டு …. ஆங்க வடைந்து; (வ் : உடம்படு
மெய்) (தொ. எ. 204 நச்.)
அகரஈற்றுள் அன்ன என்னும் உவமச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருட்
கிளவியும் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.
வருமாறு : புலி
யன்
ன சாத்தன், நாகன், வளவன்,
அரசன்;
அம்ம சாத்தா, நாகா, வளவா, அரசா.
(தொ.எ. 210 நச்.)