அம்ம என்பது தான் கூறுவதனைக் கேட்டற்கு ஒருவனை எதிர்
முகமாக்குதற்குப் பயன்படுத்தப்படும் இடைச்சொல். ‘அம்ம கேட்பிக்கும்’.
(தொ. சொ. 276 சேனா.)
அஃது அம்ம என்று இயல்பாகவும், அம்மா என ஆகார ஈறாக நீண்டும் வருமொழி
நாற்கணத்தொடு புணரும்வழி இயல் பாகப் புணரும்.
அம்ம சாத்தா, நாகா, வளவா, அரசா
அம்மா சாத்தா, நாகா, வளவா, அரசா – எனவரும்.
(தொ. எ. 210, 212 நச்.)