அகரஈற்று அன்ன என்ற இடைச்சொற் புணர்ச்சி

அகரஈற்று அன்ன என்ற உவமஉருபு வருமொழியில் நாற்கணம் வரினும்
இயல்பாகப் புணரும்.
எ-டு : புலியன்ன சாத்தன், நாகன், வடுகன்,
அரசன்
அகரஈற்றுள் பலவாக வருகின்ற உவமவுருபுகளுள் இயல்பாகப் புணர்வது
இஃதொன்றே. (தொ. எ. 210 நச்.)