அகரஈற்று அண்மை விளிப்பெயர்ப் புணர்ச்சி

விளியேற்கும் பெயர்கள் ஈற்றெழுத்துக் கெட்டு விதி அகர ஈற்றுப்
பெயர்களாக நின்றுழி, வருமொழிக்கண் நாற்கணம் வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : ‘ஊரன்’ ஊர என நின்று ஊர கேள், நட, வா, அடு என இயல்பாகப்
புணரும். (தொ. எ. 210. நச்.)