அன்ன என்னும் உவமச்சொல், அண்மை விளிப்பெயர், வியங்கோள் வினைமுற்று,
செய்ம்மன – செய்யிய – செய்த – என்ற வினைகள், அம்ம என்ற இடைச்சொல்,
பலவற்றை உணர்த்தும் பெயர்கள், வினைமுற்றுக்கள் என்பன வருமொழி வன்கணம்
வந்துழியும் இயல்பாகப் புணரும்.
எ-டு : புலி அன்ன சாத்தன் – உவம இடைச்சொல்; ஊர கேள் – அண்மை
விளிப்பெயர்; அவன் செல்க காட்டின்கண் – வியங்கோள் வினைமுற்று; உண்மன
சாத்தன் – செய்ம்மன என்னும் முற்று; யான் உண்மன சோறு – செய்ம்மன எனும்
பெயரெச்சம்; உண்ணிய சென்றான் – செய்யிய என்னும் வினை யெச்சம்; உண்ட
சோறு – செய்த என்னும் பெய ரெச்சம்; அம்ம கொற்றா – அம்ம என்னும்
இடைச்சொல்;பல குதிரை – பலவற்றை உணர்த்தும் பெயர்; உண்டன குதிரை –
கரியன குதிரை – தெரி நிலையும் குறிப்பு மாகிய வினைமுற்றுக்கள். (தொ.
எ. 210 நச்.)