அகரஈற்றுப் பெயரெச்சப் புணர்ச்சி

அகரஈற்றுப் பெயரெச்சம் வருமொழி நாற்கணம்வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : உண்டசோறு, மருந்து, வரகு, உணவு(தொ. எ. 210நச்.)
செய்ம்மன என்ற செய்யும் என்னும் பொருளதாகிய பெயரெச்சமும் இங்ஙனமே
நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : (யான்) உண்மன சோறு,
மருந்து, வரகு, உணவு (தொ. எ. 210 நச்.)