அகரஈற்றுப் ‘பலவற்றிறுதிப் பெயர்க்கொடை’ யின் புணர்ச்சி

பன்மைப் பொருளை யுணர்த்தும் அகரஈற்றுப் பெயர் களாகிய ஐந்தும்
வருமொழி நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.
அப்பெயர்களாவன பல்ல, பல, சில, உள்ள, இல்ல என்பன.
(தொ. சொ. 168 சேனா.)
வருமாறு : பல்லகுதிரை, பலகுதிரை, சிலகுதிரை, உள்ள குதிரை, இல்ல
குதிரை (தொ. எ. 210 நச்.)