அகரஈற்றுச் சுட்டின் புணர்ச்சி

அகர ஈற்றுக் சுட்டிடைச்சொல் வருமொழி வன்கணத்தொடு வந்த வல்லெழுத்து
மிக்கும், மென்கணத்தொடு வந்த மெல் லெழுத்து மிக்கும், யகர வகரம்
வருவழியும் உயிர் வருவழியும் வகரம் மிக்கும், செய்யுளில் அகரம்
நீண்டும் புணரும்.
வருமாறு : அக்கொற்றன், அச்சாத்தன், அத்தேவன், அப்பூதன் – வலி;
அஞ்ஞாண், அந்நூல், அம்மணி – மெலி; அவ்யானை, அவ்வளை – இடை; அ +
அடை
> அ + வ் + அடை
> அவ் + வ் + அடை = அவ்வடை; அ
+ ஆடை
> அ + வ் + ஆடை
> அவ் + வ் + ஆடை =
அவ்வாடை
நிலைமொழி அகரம் அவ் என்றாகித் தனிக்குறில் முன் ஒற்றாய் வருமொழி
முதல் உயிர் வந்தமையால் அவ்வொற்று இரட்டிப்பப் புணர்ந்தவாறு.
அ + இடை = ஆயிடை – தொ. பாயிரம்
அ + இரண்டு = ஆயிரண்டு – தொ. எ. 85 நச்.
அ + அறுமூன்று = ஆவறுமூன்று – தொ. சொ. 56 சேனா.
அ + வகை = ஆவகை – தொ. களவு. 22 நச்.
அ + வயின் = ஆவயின் – தொ. கற்பு. 8 நச்.
எனச் சுட்டு நீண்டவிடத்து, யகர வகர உடம்படுமெய் பெற்றும், வருமொழி
முதலெழுத்து இரட்டியாமலும், புணர்ந்தவாறு. (தொ. எ. 204 – 208
நச்.)