செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இறந்தகால – நிகழ்கால –
எதிர்மறை – குறிப்பு – அகரஈற்றுப் பெயரெச்சங்கள், வினையடி நான்கினும்
பிறந்த முற்றுக்கள், ஆறாம் வேற்றுமை யாகிய அகர உருபு, அஃறிணைப்பன்மைப்
பெயர், அம்ம என்னும் இடைச்சொல் – என்பன வருமொழி வன்கணம் வரினும்
இயல்பாகவே முடியும்.
எ-டு :
உண்ணிய கொண்டான் – செய்யிய
என்னும் வினை யெச்சம்;
உண்ட
, உண்ணாநின்ற, உண்ணாத, பெரிய
சாத்தன் – பலவகைப் பெயரெச்சம்
முற்றிற்கும் பொருள்வேறுபாடன்றிச் சொல்வேறுபாடு இன்மையின் இவையே
எடுத்துக்காட்டாம்.
வாழ்க சாத்தா – வியங்கோள்
முற்று
வினைமுற்று எச்சமாகியவழியும் இயல்பாம்.
எ-டு :
உண்ட கண்டன – முற்றெச்சம்;
அமர்
முகத்த குதிரை, அமர்
முகத்த கலக்கின: இவையும்
அது.
தன கைகள் – ஆறன்
அகரஉருபு;
பல கொடுத்தான் – அஃறிணைப்
பன்மைப் பெயர்;
அம்ம சாத்தா – அம்ம இடைச் சொல்
(நன். 167)