அகம் என்னும் சொல்லின்முன்னர்ச் செவி – கை – என்பனவரின்,
நிலைமொழியிடையில் நின்ற உயிரும் மெய்யும் கெடும்.
வருமாறு : அகம் + செவி
> அம் + செவி = அஞ்செவி; அகம்
+ கை
> அம் + கை =
அங்கை
ஒரோவழி, அகஞ்செவி, அகங்கை என இடைநின்ற உயிர்மெய் கெடாது முடியும்
இயல்பும் கொள்க. ஆண்டு ஈற்று மகரம் வன்கணத்துக்கு இனமாகத் திரிந்தது.
(நன். 222)