அகம் புறம் முதலியன ஓரிடத்தினை வரையறுத்து உணர்த் தும் – வழிஆறாவதாம்; இடம் என முழுதுணர்வு செல்ல நின்றவழி ஏழாவதாம்.எ-டு : மனையகத்து இருந்தான் – மனையினது அகத்து இருந்தான்; ஆறாம்வேற்றுமை.அறையகத்து இருந்தான் – அறைக்கண் இருந்தான்; ஏழாம் வேற்றுமை.(தொ. சொ. 83 கல். உரை)