அகப்பொருள் துறை

அகப்பாட்டுறுப்புப் பன்னிரண்டனுள் ஒன்று. தலைவனும் தலைவியும்களவினும் கற்பினும் இன்பம் நுகர்தலாகிய அகப்பொருள் பற்றிக்கவிஞர்களால் பல வகையாகப் பலர் கூற்றாகப் புனைந்துரைக்கப்பட்டசெய்திகள் அகப்பொருள் துறை எனப்படும். அகப்பாட்டு ஒவ்வொன்றும் நிகழும்சந்தருப்பம் ஒவ்வொரு துறையாம்.அகப்பொருள் இலக்கணம் வழுவாதவாறு தன்னையன்றி உரைப்போரும் கேட்போரும்உண்டாகலின்றிக் கவிசொல் லும் புலவன் தானே கூறுவது ‘துறை’ என்னும்உறுப்பாம். (ந. அ. 234)எ-டு : ‘எறிதேன் அலம்பும் சிலம்பில்….’ (தஞ்சை.கோ.15)“இம்மலையில் எப்போதும் இவள்பின்னர் வாளா திரிந்து மெலிந்தோம்;இவள்நினைவு வேறு போலும்”என்று வருந்திய பெருந்தகை மனம் தெளியுமாறுதலைவி சிறிதே புன்முறுவல் செய்தாள் – என்ற கவிகூற்று இப்பாடல்.