அகப்பொருட் கோவை

அகப்பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம். இரு வகைப் பட்டமுதற்பொருளும் பதினான்கு வகைப்பட்ட கருப் பொருளும் பத்துவகைப்பட்டஉரிப்பொருளும் பொருந்தி, கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப்பகுதியவாம் களவொழுக்கத்தினையும் கற்பு ஒழுக்கத்தினையும் கூறுதலேஎல்லையாகக் கொண்டு, நன்மையுற்ற கட்டளைக் கலித்துறை நானூறாக, திணைமுதலாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட 12 அகப்பாட்டுறுப்பும் வழுவின்றித்தோன்றப் பாடுவது அகப் பொருட் கோவை என்றவாறு. (இ. வி. பாட். 56உரை)அவ்வுறுப்புப் பன்னிரண்டாவன திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடன்,காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், திணைவகை, துறை என்பன. (ந.அ. 211)