இது கருவிவகை நான்கனுள் ஒன்று. புணர்ச்சிக்குரிய திரிபுகள் இவை
என்பதும், இயல்புபுணர்ச்சி திரிபுபுணர்ச்சி வகைகளும், நிலைமொழி
யீற்றில் இணையும் சாரியை வருமொழியொடு புணருங்கால் அடையும் திரிபுகளும்
ஆகி, நிலைமொழி வருமொழிகள் புணர்தற்கு ஏற்றனவாய் வரும் விதிகள் பற்றிய
நூற்பாக்கள் அகப்புறக் கருவிகளாம்.
தொல்காப்பிய எழுத்ததிகாரத்துள் நான்காம் இயலாகிய புணரியல்,
நிலைமொழி – வருமொழி – இயல்புபுணர்ச்சி – திரிபுபுணர்ச்சி – சாரியைகள்
– அவை இணையுமாறு – உடம்படு மெய் – முதலியன பற்றிக் கூறலின், அவ்வியல்
அகப்புறக் கருவியாம். (தொ. எ. 1 நச். உரை)