அஃதாவது பாட்டின் இறுதியடி இடையடி போன்று நிற்பது. அவையாவனமுடித்துக் காட்டும் ஏகாரத்தான் அன்றி, ஒழிந்த உயிரீற்றானும்ஒற்றீற்றானும் வருவன. அவை‘தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன’(தொ. பொ. 560. பேரா.)‘உண்கண் சிவப்ப தெவன்கொ லன்னாய்’ (ஐங். 21) முதலாக வரும். இவைஆசிரிய ஈற்றன.‘போயினான் யாண்டையான் போன்ம்’ என, இவ்வெண் பாவின் இறுதியடிமுடியாத் தன்மையின் முடிந்ததாகலின் அகப்பாட்டு வண்ணமாயிற்று.‘கொடியுவணத் தவரரோ’ எனக் கலிப்பாவுள் ‘அரோ’ வந்து பின் முடியாத்தன்மையின் முடிந்ததாகலின், இவ்வடியும் அகப்பாட்டு வண்ணமாயிற்று. (தொ.செய். 224. பேரா.)